Latestமலேசியா

கெடாவில் ராஜ நாகம் தீண்டுவதிலிருந்து 74 வயது பெண்மணி உயிர் தப்பினார்

சிக், ஜூன் 7- கெடா , Sik கில் Jeniang-கில் Kampung Berona Kanan-னில் கழிவறைக்கு சென்ற 74 வயது பெண்மணி ஒருவர் தெய்வாதீனமாக ராஜ நாகம் தீண்டுவதிலிருந்து உயிர் தப்பினார். பார்வை மங்கிய அந்த பெண்மனி சிறுநீர் கழிப்பதற்கு கழிவறைக்கு சென்றபோது அங்கு பாம்பு சீறும் சத்தம் கேட்டதை அறிந்து உடனடியாக அங்கிருந்து வீட்டிற்குள் ஓடிவந்தார். இதனைத் தொடர் ந்து Sik-கிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு அதிகாலை மணி 3.30 அளவில் தகவல் கொடுக்கப்பட்டது.

அவ்வீட்டிற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2.3 மீட்டர் நீளமுள்ள ராஜ நாகத்தை கண்டனர். தொடக்கத்தில் அந்த பாம்பு முரட்டுத்தனமாக செயல்பட்டதால் அதனை பிடிப்பதில் அவர்கள் சிரமத்தை எதிர்நோக்கினர். எனினும் பின்னர் லாவகமாக அவர்கள் அதனை பிடிப்பதில் வெற்றி பெற்றனர். தற்போது கடுமையாக வறட்சியாக இருப்பதால் பாம்பு போன்ற ஊர்வனங்கள் குளிர்ச்சியாக இருக்கும் பகுதியில் ஊடுருவும் வாய்ப்பு இருப்பதால் வீடுகளில் கழிவறை மற்றும் குளியல்அறைகளை மிகவும் கவனமாக பயன்படுத்தும்படி தீயணைப்பு படையின் பேச்சாளர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!