Latestமலேசியா

கெப்போங்கில் பாராங் கத்தியால் தாக்கப்பட்ட போலீஸ்காரரின் வலது மணிக்கட்டு துண்டிப்பு; பிரதமர் அன்வார் கடும் கண்டனம்

கோலாலம்பூர், நவம்பர்-12,கோலாலம்பூர், கெப்போங்கில் பாராங் கத்தியால் தாக்கப்பட்ட போலீஸ்காரர் ஒருவரின் வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அமுலாக்க அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.

நேற்று மாலை, கெப்போங், டேசா அமான் புரியில் ஆடவர் ஒருவர் வன்முறையில் ஈடுபடுவதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.

அப்போது, 2 பாராங் கத்திகளுடன் தாக்குதல் நடத்திய வெளிநாட்டு ஆடவரால், 26 வயது போலீஸ்காரரின் வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டதுடன், தலை மற்றும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன.

பின்னர் தப்பியோடிய சந்தேக நபர், போலீஸாரை மீண்டும் தாக்க முயன்றபோது சுடப்பட்டார்.

மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

காயமடைந்த போலீஸ்காரர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ
Shazeli Kahar தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!