
கோலாலம்பூர், நவம்பர் 12,சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் 3 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 2.04 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இறைச்சி மற்றும் உபகரணங்களை கால்நடை சேவைத் துறை பறிமுதல் செய்துள்ளது.
கிள்ளான் துறைமுகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 8,500 கிலோ கிராம் பன்றி இறைச்சியும், செமஞேவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 7,400 கிலோ கிராம் பன்றி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், செமஞேவில் ஒரு கொள்கலனும் இரண்டு _forklift_ இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன.
இதனிடையே, கோலாலம்பூர் தாமான் ஏசான் தொழிற்பேட்டையில் போலி ஹலால் சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், 1.14 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 45 ஆயிரத்துக்கும் கிலோ கிராமுக்கும் மேற்பட்டை கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவங்கள் தொடர்பில் 1953ஆம் ஆண்டு விலங்குகள் சட்டம் மற்றும் 2011-ஆம் ஆண்டு வணிக விளக்கச் சட்டத்தின் கீழ் மேல் விசாரணை மேற்கொள்ளப்படும் என கால்நடை சேவைத் துறை தெரிவித்துள்ளது.



