
கெப்போங், ஆகஸ்ட் 21 – கெப்போங்கில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 62 வயது பெண் உடலில் சுமார் 50 விழுக்காடு தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக 59 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், லாட்டரி எண்கள் தொடர்பான பிரச்சினையால் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதமே தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தாயாருக்கும் சந்தேகநபருக்கும் உண்மையில் என்ன தொடர்பு இருந்தது என்பது குறித்து போலீசார் தெளிவாக தெரிவிக்கவில்லை என அவரது மகள் கூறினார். தாயார் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதுடன், நான்காவது அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் அவரது உடல்நிலை மேம்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.



