Latestமலேசியா

கெமமான் நாடாளுமன்ற இடைத்தேர்தல் பருவ மழை; பாஸ் வேட்பாளரின் பெரும்பான்மைக்கு மிரட்டல்

கோலாலம்பூர், டிச 1 – திரெங்கானு மாநிலத்தில் நாளை நடைபெறவிருக்கும் கெமமான் நாடாளுமன்ற தொதிக்கான இடைத் தேர்தலில் 30,000 வாக்குகள் பெரும்பான்மையைப் பெறுவதற்கான பாஸ் கட்சியின் வாய்ப்பை பருவமழை குறைக்கக்கூடும் என்று ஒரு “Ilham” சிந்தனை மையத்தை சேர்ந்த ஹிசோமுடின் பக்கார் தெரிவித்திருக்கிறார். இந்த இத்தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் வேட்பாளராக பாஸ் கட்சியைச் சேர்ந்த திரெங்கானு மந்திரிபெசார் அஹ்மாட் சம்சூரி மொக்தார் தேசிய முன்னணி வேட்பாளர் ராஜா அஃபாண்டியுடன் நேரடி போட்டியை எதிர்நோக்கியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொது தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் வேட்பாளரின் வெற்றி செல்லுபடியாகது என தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த தேர்தலின்போது பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சே அலியாஸ் ஹமீட் 27,170 வாக்குளில் தேசிய முன்னணியின் முன்னாள் மந்திரிபெசார் அஹ்மாட் சைட்டை தோற்கடித்தார்.

இந்த தொகுதியில் 30,000த்திற்கும் மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளில் வெற்றிபெறுவதற்கு தாங்கள் திட்டமிட்டுள்ளதாக இதற்கு முன் பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குனர் சனுசி நோர் கூறியிருந்தார். நாளை காலை முதல் கெமமான் வட்டாரத்தில் மழை பெய்யும் என வானிலைத்துறை ஆருடம் தெரிவித்திருப்பதால் அதிக பெரும்பான்மைக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளதை பாஸ் கட்சியின் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!