Latest

கெமமான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பெரிக்காத்தான் வேட்பாளர் அகமட் சம்சுரி 64,968 வாக்குகள் பெற்று வெற்றி

கோலாலம்பூர், டிச 2 – திரெங்கானு மாநிலத்தில் இன்று நடைபெற்ற கெமமான் நாடாளுமன்ற தொதிக்கான இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் வேட்பாளரான பாஸ் கட்சியின் அகமட் சம்சுரி மொக்தார் ( Ahmad Samsuri Mokhtrar ) 64,968 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இன்று இரவு மணி 9.01 அளவில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி திரெங்கானு மந்திரிபுசாருமான அகமட் சம்சுரி 64,968 வாக்குகளை பெற்றார். இதன்வழி கெமமான் நாடாளுமன்ற தொதியை பாஸ் கட்சி வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணியின் வேட்பாளரான ரணுவ படைகளின் முன்னாள் தளபதி Raja Affandi Raja Noor 27,839 வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொது தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் வேட்பாளரின் வெற்றி செல்லுபடியாகது என தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் இன்று நடைபெற்றது. கடந்த தேர்தலின்போது பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Che Alias Hamid 27, 170 வாக்குகள் பெரும்பாண்மையில் தேசிய முன்னணியின் முன்னாள் மந்திரிபெசார் Ahmad Said ட்டை தோற்கடித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!