கோலாலம்பூர், நவ 20 – கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரை குத்திய ஊழியர் உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கக்கம் செய்யப்பட்டதோடு அவருக்கு எதிராக காரணம் கோரும் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த விமான நிலையத்தில் ‘Not to land’ என்ற பகுதியில் நுழைந்த வெளிநாட்டினரை பார்த்தவுடன் அவரை குத்திய அந்த ஊழியருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
NTL பகுதியை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள AeroDarat Services Sdn Bhd நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியருக்கு எதிராக காரணம் கோரும் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிக்குள் நுழைந்த வெளிநாட்டவர் ஆத்திரம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டதோடு அவதூறு ஏற்படுத்தியதாக சம்பந்தப்பட்ட ஊழியர் தெரிவித்திருந்தபோதிலும் வெளிநாட்டவர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலும் அவர்கள் மேல் கை வைக்கும் ஊழியர்களின் நடவடிக்கையை நாங்கள் பாதுகாக்க முடியாது என அந்தோனி லோக் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.