Latestமலேசியா

கையூட்டு பெற்றனர் 3 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட ஐவர் கைது

ஜோகூர் பாரு, மார்ச் 6 – சட்டவிரோத குடியேறிகளை நாட்டிற்குள் நுழைவதற்கு ஏற்பாடு செய்தால் அதற்கு பதிலாக லஞ்சம் கேட்டது மற்றும் கையூட்டு பெற்றது தொடர்பில் மூன்று குடிநுழைவு அதிகாரிகள் உட்பட ஐவரை M.A.C.C கைது செய்துள்ளது. 35 முதல் 46 வயதுடைய நான்கு ஆடவர்கள் மற்றும் ஒரு பெண் ஆகிய சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதை MACC தவகல்கள் தெரிவித்தன. குடிநுழைவுத் துறையின் அந்த மூன்று அதிகாரிகள் Senai அனைத்துலக விமான நுழையத்தில் பணியாற்றி வந்தனர். அவர்களுடன் பொதுமக்களில் இருவரும் நேற்று மாலை மணி 5க்கும் இரவு 11 மணிக்குமிடையே கைது செய்யப்பட்டனர்.

அந்த இருவரில் ஒருவர் ஜோகூர் MACC அலுவலகத்திலும் மற்றொருவர் லார்க்கினிலும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. முறையான நடைமுறை விதிகள் இன்றி வெளிநாட்டினர்கள் மலேசியாவுக்குள் நுழைவதற்கு கையூட்டு வழங்க முன்வந்தது தொடர்பான குறுஞ்செய்தி பெற்றதோடு அதற்கு இணக்கம் தெரிவித்த தகவலையும் MACC அதிகாரிகள் கண்டறிந்தனர். கையூட்டு தொடர்பில் மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை ஜோகூர் குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் Azmi Alias உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!