Latestமலேசியா

கொட்டித் தீர்த்த மழை; கிள்ளான் பள்ளத்தாக்கு திடீர் வெள்ளத்தில் 8 வாகனங்கள் நீரில் சிக்கின

கோலாலம்பூர், மே-7-நேற்று பிற்பகலில் பெய்த கனமழையால் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் மாலை நேர நெரிசலில் சிக்கிய வாகனமோட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

​கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தகவல்படி, 3 முக்கிய இடங்களில் குறைந்தது 8 வாகனங்கள் வெள்ள நீரில் சிக்கின.

இதில் Taman OUG, Jalan Awan Kecil பகுதியில் மட்டும் 5 கார்கள் நீரில் மூழ்கின.

​அதேபோல், Jalan Kuchai Lama பகுதியில் 2 வாகனங்களும், கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் ஒரு காரும் சிக்கிக் கொண்டன.

புக்கிட் ஜாலில் மற்றும் செப்பூத்தே நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் விரைந்து ஈடுபட்டனர்.

​இந்த சம்பவங்களில் எவருக்கும் காயம் அல்லது உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

முன்னதாக, 9 மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

​வானிலை சீரற்ற நிலையில் இருப்பதால், வாகனமோட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!