Latestமலேசியா

கோம்பாக்கில், நச்சுணவால் இருவர் உயிரிழந்த சம்பவம் ; சுகாதார அமைச்சு விசாரணை

குவந்தான், ஜூன் 11 – சிலாங்கூர், கோம்பாக்கில், நச்சுணவால் 17 வயது வயது பதின்ம வயது இளைஞன் ஒருவனும், இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சுகாதார அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

அவ்விவகாரத்தை தமதமைச்சு பரிசீலனை செய்து வருவதாக, சுகாதார துணையமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் செளனி (Datuk Lukanisman Awang Sauni) கூறியுள்ளார்.

அவ்விவகாரம் இன்னமும் மதிப்பாய்விலும், விசாரணையிலும் தான் உள்ளது. விரைவில், அது தொடர்பில், சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடுமென, லுகானிஸ்மான் சொன்னார்.

முன்னதாக, மீ மற்றும் பொறித்த முட்டையை உண்ட இரு நாட்களுக்கு பின்னர், நச்சுணவு காரணமாக, 17 வயது பதின்ம வயது இளைஞனும், இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்ததை, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் நோர் அரிப்பின் முஹமட் நாசிர் (Noor Arrifin Mohamad Nasir) உறுதிப்படுத்தி இருந்தார்.

கடந்த சனிக்கிழமை, சிலாங்கூர், கோம்பாக், சுங்கை சின்சின் (Sungai Cincin) சமயப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய தாயார் கொண்டு வந்த உணவை உட்கொண்ட பின்னர், சம்பந்தப்பட்ட 17 வயது இளைஞன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!