Latestமலேசியா

அரசாங்க உதவிகள் குறித்த தகவல்களைத் தாங்கி ஓரிடச் சேவை மையமாக வரும் manfaat.mof.gov.my அகப்பக்கம்

கோலாலம்பூர், நவம்பர்-8, மக்கள் நலத் திட்டங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய இணைய அகப்பக்கத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

manfaat.mof.gov.my என்ற அப்பக்கத்தில் வாழ்க்கைச் செலவின ரொக்க உதவி, சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள், வேலை வாய்ப்பு, வீடமைப்பு, கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்கள், குழந்தைப் பராமரிப்பு, மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் என தனிநபர் முதற்கொண்டு குடும்பங்களுக்கான உதவிகள் வரை அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

வியாபாரம் செய்வோரும், கடனுதவி, சந்தைப்படுத்துதல், வேலைக்கு ஆள் எடுத்தல், வரிச் சலுகை, முதலீடுகள், வசதிக் கட்டமைப்புகள், தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி குறித்த தகவல்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம்.

உள்ளூர் சமூக மேம்பாடு, அரசு சார்பற்ற அமைப்புகள், தொண்டூழியம், பாதுகாப்பு, இளைஞர்-விளையாட்டுத் துறை போன்ற துறைகளுக்கான உதவிகள் குறித்த தவல்களும், இந்த ஓரிட சேவை மைய அகப்பக்கத்தில் வழங்கப்படுகின்றன.

இந்த manfaat இணையப் பக்கத்தில் பதிந்துக் கொண்டு, உங்கள் தகுதிக்கேற்ற அரசாங்க உதவிகளை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

தகுதி அளவு, விண்ணப்பிக்கும் முறைகள், ஆலோசனைகள், வழிகாட்டிகள் உள்ளிட்டவையும் இதில் வழங்கப்படுகின்றன.

அரசாங்க உதவிகள் குறித்த அனைத்துத் தகவல்களை வேறெங்கும் தேடாமல், இந்த manfaat அக்கப்பக்கத்திலேயே தெரிந்துக் கொள்ளும் வசதியை, ஒற்றுமை அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

எனவே, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, நம் மக்களும் அரசாங்க அனுகூலங்களைப் பெறுவதிலிருந்து விடுபடாதிருப்பதை உறுதிச் செய்வோம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!