
நிபோங் தெபால், ஜூன்-12-மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமான USM-மின் இந்திய கலாச்சார சங்கத்தின் (PKI) ஏற்பாட்டில், 32-ஆவது ‘மாலாம் அனேகாராகம்’ (32nd Malam Anekaragam 2026) நடனப் போட்டி விழா பல்கலைக்கழக பொறியியல் வளாக முதன்மை மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணரவும், பன்முக கலாச்சார ஒற்றுமையை வளர்க்கவும் இவ்விழா நடத்தப்பட்டது.
பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் நவீன பாணி நடனப் போட்டிகள் எனப் பல அங்கங்களாக நடைபெற்ற இப்போட்டியில் 400-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், டத்தின் ஸ்ரீ ஷைலா நாயர், இயக்குநர் கார்திக் ஷாமளன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.
இப்போட்டியின் தனிநபர் பிரிவில் சுபிக்ஷா கோபி சாம்பியன் பட்டம் வென்ற வேளையில், குழு பிரிவில் ‘வின்ஸ் க்ரூ’ (VINS Crew) முதலிடத்தைத் தட்டிச் சென்றது.
இவ்விழாவின் மூலம் திரட்டப்பட்ட தொகை, பல்கலைக்கழகத்தில் பயிலும் B40 பிரிவு மாணவர்களுக்கு உணவு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் “கை கொடுப்போம்” நற்பணித் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது சிறப்பம்சமாகும்.



