Latestமலேசியா

கோலாக் கிராயில், 5 நாட்களுக்கு முன் காணாமல் போன ‘அல்சைமர்’ நோயாளி ; இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்

கோலாக் கிராய், மே 28 – கிளந்தான், கோலாக் கிராயில், ஐந்து நாட்களுக்கு முன் காணாமல் போன, “அல்சைமர்” முதுமறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரின் பாதி உடல், பாசிர் லாயாங்கிலுள்ள, செம்பனை தோட்டம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

நேற்று மாலை மணி 6.15 வாக்கில், அந்த 70 வயது முதியவரின் உடல் ஆடை இன்றி நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.

கொடிய காட்டு விலங்குகளால் தாக்கபட்டிருக்கலாம் என நம்பப்படும் அந்த முதியவரின் உடலில், கடிக்கப்பட்டதற்கான அடையாளங்களும் தென்படுவதாக, கோலாக் கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் மஸ்லான் மாமாட் தெரிவித்தார்.

கடந்த வாரம் செவ்வாய்கிழமை, தனது செம்பனை தோட்டத்திற்கு செல்வதாக கூறி சென்ற அம்முதியவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

அவர் காணாமல் போனது தொடர்பில், கடந்த புதன்கிழமை போலீஸ் புகார் ஒன்று செய்யப்பட்டிருப்பதையுன் மஸ்லான் உறுதிப்படுத்தினார்.

சவப் பரிசோதனை வாயிலாக, அம்முதியவர் இறந்து ஐந்து நாட்கள் ஆகி இருக்கலாம் என நம்பப்படும் வேளை ; உடல் அழுகிய நிலையில் இருப்பதால், அவர் இறந்ததற்கான உண்மைக் காரணத்தை கண்டறிய முடியவில்லை எனவும் அஸ்மான் கூறியுள்ளார்.

அதனால், அதனை ஒரு திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!