
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – கோலாலம்பூரில், OUG சமூக மண்டபமருகே அரசு நிலத்தில் சட்டவிரோதமாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து வந்த நபர், குடியிருப்பாளர்கள் பிரதிநிதி குழு உறுப்பினரைத் தாக்கியதைத் தொடர்ந்து அவருக்கு 6 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர், மிரட்டல் விடுத்தது மற்றும் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 20 முதல் 26 வயதிற்குட்பட்ட மூன்று ஆண்களை போலீசார் கைது செய்தனர். மூவருக்கும் ஏற்கனவே குற்றப் பதிவுகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் கும்பல்களுக்கு எதிராக போலீசாரும் கோலாலம்பூர் மாநகராட்சியும் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென Seputeh நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் (Teresa Kok) வலியுறுத்தினார்.



