Latestமலேசியா

கோலாலம்பூரில் ‘பேய் வீட்டில்’ சிறுமிக்கு பாலியல் தொல்லை; கேளிக்கைப் பூங்கா வழிகாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை

கோலாலம்பூர், ஜூலை-29-கோலாலம்பூரில் உள்ள பிரபல வணிக வளாகமொன்றின் கேளிக்கைப் பூங்காவில் ‘பேய் வீடு’ (Haunted House) விளையாட்டில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 30 வயது ஆடவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

​வங்காளதேசியான Md Israful Alam என்ற அந்நபர், கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி கைதுச் செய்யப்பட்ட தேதியிலிருந்தே இந்த சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

​சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட சிறுமி, அந்த ‘பேய் வீடு’ விளையாட்டின் போது அந்த நபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அங்குள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் குற்றம் உறுதியானது.

​இந்தச் சம்பவத்தால் சிறுமிக்கு கடும் உளவியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வெளியே செல்வதற்கே அச்சப்படுவதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

சிறைத்தண்டனையோடு சேர்த்து, அவருக்கு கட்டாய ஆலோசனையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

​2017-ஆம் ஆண்டு சிறுவர் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!