Latestமலேசியா

கோலாலம்பூரில் BHP பெட்ரோல் நிலையத்தில் தீ: எரிபொருள் விலை அறிவிப்புப் பலகை சேதமடைந்தது

கோலாலம்பூர், ஜூலை-28-நேற்றிரவு Sungai Besi அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் BHP பெட்ரோல் நிலையமொன்றில் ஏற்பட்ட தீயில் எரிபொருள் விலை விவரம் காட்டும் பலகை சேதமுற்றது.

அத்தீச் சம்பவம் குறித்து இரவு 9.57 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து Seri Kembangan தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar தெரிவித்தார்.

அங்கு சென்றடைந்த தீயணைப்பு வீரர்கள் பெட்ரோல் நிலையத்தின் எரிபொருள் விலை பலகையில் தீப்பிடித்திருந்ததைக் கண்டனர்.

அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு இரவு 10.22 மணிக்குத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மீட்புப் பணிகள் இரவு 11 மணிக்கு நிறைவடைந்தன.

அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!