புத்ரா ஜெயா, ஏப் 4 – சிலாங்கூரின் Kuala Kubu Baru சட்டமன்ற இடைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 11ஆம்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 27ஆம் தேதியும் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான வாக்களிக்கும் தினம் மே 7 ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் Abdul Ghani Salleh இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த DAP யின் Lee Kee Hiong மார்ச் 21 ஆம் தேதி புற்று நோய் காரணமாக காலமானதை தொடர்ந்து கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதி காலியானது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதியில் 4,119 வாக்குகள் பெரும்பான்மையில் Lee Kee Hiong கெராக்கான் வேட்பாளர் Henry Teoh வை தோற்கடித்தார்.