Latestமலேசியா

கோலா நெருசிஸில், வேலியில் ஏற முயன்ற கரடி ; குடியிருப்பாளர் பதிவுச் செய்த காணொளி வைரல்

கோலா நெருஸ், மார்ச் 27 – திரங்கானு, கோலா நெருஸ், தோக் ஜெம்புலிலுள்ள, குடியிருப்பு பகுதி ஒன்றில், போடப்பட்டிருக்கும் வேலியில், கரடி ஏற முயலும் காணொளி, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அந்த 21 வினாடி காணொளியை சம்பந்தப்பட்ட குடியிருப்பில் வசிக்கும், Ryu Watanabe என்பவர் பதிவுச் செய்து தமது முகநூலில் நேற்று பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த காணொளி இதுவரை 39 முறை பகிரப்பட்டுள்ள வேளை ; 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

தோக் ஜெம்புலிலுள்ள, குடியிருப்பு பகுதியில் இருப்பதாக நம்பப்படும் வேலியில், கரடி ஒன்று ஏற முயலும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன.

அந்த காணொளிக்கு கீழ் இணையப் பயனர்கள் பலர் கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேம்பாட்டு நடவடிக்கைகளால், உரைவிடத்தை இழந்து தவிக்கும் அந்த கரடி குறித்து பலர் வருத்தமும், ஆறுதலும் தெரிவித்துள்ள வேளை ;

மேலும் சிலர், அதீத வெப்பம் காரணமாக, அந்த கரடி காட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், அந்த கரடிக்கு என்னவானது? அது மீண்டும் காட்டிற்கு திரும்பி விட்டதா? என்ற விவரம் எதுவும் அந்த பதிவில் இடன்பெற்றிருக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!