Latestமலேசியா

கோவில் இடிப்பு விவகாரம்: சமூக ஆர்வலர் அருண் துரைசாமி கைது

கங்கார், செப்டம்பர் 4 – இந்து கோவில் இடிப்பு தொடர்பான போராட்டம் குறித்து சமூக ஊடகத்தில் தூண்டுதலான பதிவை வெளியிட்டதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர், 55 வயது சமூக ஆர்வலர் அருண் துரைசாமி என அறியப்படுகிறது.

ஆலோசகராக பணியாற்றும் அவர், நேற்று காலை 10 மணியளவில் சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டதாக கங்கார் காவல்துறைத் தலைவர் யுஷாரிபுடின் யூசோப் (Yusharifuddin Yusop) தெரிவித்தார். அவரை இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 22 முதல் 27ஆம் தேதி வரை அவரது TikTok பதிவுகள் தொடர்பாக 14 புகார்கள் கிடைத்துள்ளன. ஆகஸ்ட் 30ஆம் தேதி புக்கிட் லாகியிலுள்ள, (Bukit Lagi) ஸ்ரீ வீர மகா காளியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ‘பெர்ஹிம்புனன் மேரா மகா காளி’ (Perhimpunan Merah Maha Kali) கூட்டம், ஆகஸ்ட் 20ஆம் தேதி கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிரான நடவடிக்கையாக இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.

அந்தப் பதிவு இந்து சமூகத்தினரை சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தூண்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கு தேசத் துரோகச் சட்டம் மற்றும் இணைய வசதிகளை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

மேலும், இக்கூட்டம் மதம் மற்றும் இனக் கலவரத்தைத் தூண்டும் அபாயம் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!