Latestமலேசியா

சட்ட நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்ற ஐவரை மலாக்கா எம்.ஏ .சி.சி கைது செய்தது

மலாக்கா, ஜூன் 6 – சொத்துடமைக்கான கடன் அனுமதிகளுக்கு தூண்டுதலாக மலாக்காவில் உள்ள சட்ட நிறுவனங்களிடமிருந்து 316,064 ரிங்கிட் லஞ்சம் பெற்றதன் தொடர்பில் ஐந்து ஆடவர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்தது. ஐவரில் இருவர் வழக்கறிஞர்கள், மற்றவர்கள் வங்கி அதிகாரி, முன்னாள் வங்கியாளர் மற்றும் ஒரு சட்ட நிறுவனத்தின் நிர்வாகியும் அடங்குவர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் 37 மற்றும் 53 வயதுடையவர்கள் என்பதோடு விசாரணக்கு உதவுவதற்காக அவர்களை ஐந்து நாள் தடுத்து வைப்பதற்கு Air keroh மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் நீதிபதி நபிலா நிஜாம் (Nabilah Nizam ) அனுமதி வழங்கினார்.

அந்த ஐவரும் மலாக்காவிலுள்ள நிதி நிறுவனத்திடமிருந்தும் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அதன் தலைமையகத்திலிருந்தும் சொத்துக் கடன்களை அனுமதிப்பதற்கான ஆவணச் செயல்முறையை எளிதாக்குவதற்காக மலாக்காவிலுள்ள சட்ட நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் கோரியதாக சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 2018 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை அவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்கள் கைது செய்யப்பட்டதை மலாக்கா MACC இயக்குனர் ஹடி சுபியான் ஷாபி
( Adi Supian Shafie ) உறுதிப்படுத்தினார். 2009 ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 16ஆவது பிரிவு உடபிரிவு (a) (A) யின் கீழ் விசாரணக்கு உதவுவதற்காக அந்த ஐவரும் நேற்று பிற்பகலில் மலாக்கா எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு வந்தபோது கைது செய்யபப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!