Latestமலேசியா

சமய உணர்வுகளை காயப்படுத்தினர் கே.கே மார்ட் தோற்றுவிப்பாளர் இயக்குநர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்

ஷா அலாம், மார்ச் 26 – Allah பதம் கொண்ட காலுறைகளை விற்பனை செய்ததில் முஸ்லீம்களின் சமய உணர்வுகளை உள்நோக்கத்தோடு காயப்படுத்தியதாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை KK Mart வர்த்தக மையத்தின் தோற்றுவிப்பாளர் K. K Chai Kee kan மற்றும் அதன் இயக்குனர் Loh Siew Mui மறுத்தனர். ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Anas Mahadzir முன்நிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 57 வயதுடை
K.K Chai Kee Kan னும் அவரது மனைவியான 53 வயதுடைய Loh siew Mui ஆகியோர் அதனை மறுத்து விசாரணை கோரினர். அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக K.k Chai யும் , Siew Mui Loh நிறுவனத்தின் இயக்குனராவும் இருந்து வருகின்றனர். குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் ஒரு ஆண்டுவரை சிறை , அபராதம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 298 ஆவது விதியின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதற்கு முன்னதாக இன்று காலையில் ஷா அலாம் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அங்கு அதிகமான போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். Alah பதத்தைக் கொண்ட காலுறைகளை மார்ச் 13ஆம் தேதி காலை 6.30 மணியளவில் பண்டார் சன்வேயில் உள்ள KK Supermart & Superstore Sdn Bhd ட்டில் விற்பனை செய்வதற்காக காட்சிக்கு வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த காலுறைகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இம்மாதம் 16 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Chai மன்னிப்புக் கோரினார். அந்த காலுறைகளை விநியோகித்த Batu Pahat ட்டைச் சேர்ந்த விற்பனையாளர் Xian Jian CHang Sdn Berhad நிறுவனத்தின் மூன்று தனிப்பட்ட நபர்களும் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். குற்றவியல் சட்டத்தின் 109ஆவது விதியை மீறியதில் உடந்தையாக இருந்ததாக Soh Chin Huat. Soh Hui San மற்றும் Goh Li Huay ஆகியோர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!