Latestமலேசியா

சரவாக் செரியான் பள்ளி கழிவறையில் 46 வயது ஆடவர் சடலமாக மீட்பு

சரவாக், அக்டோபர் 29 – சரவாக், செரியான், பத்து 32, ஜாலான் பாக்கி லாமா (Jalan Baki Lama) பகுதியிலுள்ள பள்ளி ஒன்றின் கழிவறையில் 46 வயதுடைய ஆடவர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, செரியான் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் மாலை 4.43 மணியளவில் அங்கு சென்றடைந்தபோது, ஆடவர் ஒருவர் கழிவறைக்குள் அசைவற்ற நிலையில் கிடந்ததைக் கண்டனர்.

கழிவறையின் கதவைத் திறப்பதற்குச் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்திய தீயணைப்பு வீரர்கள், உள்ளே சென்று அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, மேல் நடவடிக்கைகளுக்காக அவரது உடல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!