Latestஉலகம்

சர்ச்சைக்குரிய உலகப் பிரபலம் ஓ.ஜே.சிம்சன் புற்றுநோயால் உயிரிழப்பு

அமெரிக்கா, ஏப்ரல் 12 – இரட்டைக் கொலைகளுடன் தொடர்புப்படுத்தப்பட்ட
சர்ச்சைக்குரிய அமெரிக்க கால்பந்தாட்ட பிரபலம் O.J. Simpson புற்றுநோயால் தனது 76-வது வயதில் காலமானார்.

Prostate புற்றுநோயுடன் போராடி வந்த தங்களது தந்தை ஏப்ரல் 10-ஆம் தேதி உயிரை விட்டதாக சிம்சனின் குடும்பம் சமூக ஊடகங்களில் அறிவித்தது.

இந்த துயர்மிகு காலத்தில் குடும்பத்துக்குத் தனிமைத் தேவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், Simpsonனின் உடல் எங்கு வைக்கப்பட்டுள்ளது, அடக்கம் எங்கே என்பன உள்ளிட்ட தகவல்கள் இல்லை.

ஒரு நடிகராகவும் சாதித்தவரான O.J. Simpson , 1994-ஆம் ஆண்டு தனது முன்னாள் மனைவியையும் அவரின் காதலனையும் கொடூரமான முறையில் படுகொலைச் செய்த வழக்கில் கைதாகி பரபரப்பை ஏற்படுத்தினார்.

எனினும் நீதிமன்ற வழக்கு விசாரணையின் இறுதியில் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் 2008-ஆம் ஆண்டு ஆயுதமேந்திக் கொள்ளையிட்ட வழக்கில் கைதாகி 9 ஆண்டுகள் சிறையில் இருந்த சிம்சன், 2017-ஆம் ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!