Latestமலேசியா

சாலையோரக் கடையில் வாங்கிய பானத்தில் செத்துப் போன பல்லி; அதிர்ச்சியில் உறைந்தப் பெண்

கோலாலம்பூர், ஏப்ரல்-1, நோன்புப் துறப்பதற்காக சாலையோர அங்காடிக் கடையில் வாங்கி வந்த பானத்தில் பல்லி செத்துக் கிடந்ததைக் கண்டு பெண்ணொருவர் அதிர்ச்சியில் உறைந்துப் போன சம்பவம் வைரலாகியுள்ளது.

கிள்ளானில் உள்ள சாலையோரக் கடையில் இருந்து அந்த இராசவள்ளி கிழங்கு (Yam) பானத்தை ஆசை ஆசையாக அவர் வாங்கியுள்ளார்.

பிளாஸ்டிக்கில் வாங்கி வந்த அந்த பானத்தை வீட்டில் பெரிய ஜக்கில் ஊற்றி முடிக்கும் சமயத்தில், பிளாஸ்டிக்கினுள் இருந்து ஏதோ வந்து விழும் நிலையில் இருந்ததை அவர் கண்டார்.

“அதன் வடிவத்தைப் பார்க்கையில் அது கடல் பாசி (Cincau) என நினைத்தேன்; ஆனால் உற்றுப் பார்த்த போது தான் அது செத்துப் போன பல்லி என தெரிந்து அதிர்ச்சியில் உறைந்தேன். கிட்டத்தட்ட அழுகிய நிலையில் அப்பல்லி இருந்தது” என அவர் கூறினார்.

நல்ல வேளை, குடிப்பதற்கு முன்பே பல்லி செத்துக் கிடந்ததைப் பார்த்து விட்டீர்; பார்க்காமல் அப்படியே குடித்திருந்தால் என்னவாகியிருக்கும் எனக் கூறிய ஒரு நெட்டிசன், கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருப்பதை எண்ணி நிம்மதி அடைய வேண்டியது தான் என கருத்துப் பதிவிட்டுள்ளார்.

‘செத்துப் போன பல்லி பான’த்தைப் பார்த்து பெரும்பாலான நெட்டிசன்கள் கோபத்துடன் கருத்துகளைப் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது.

அதோடு, கடையில் வாங்கிய சாதத்தில் நத்தை முட்டை இருந்தது போன்ற தங்களின் அனுபவங்களையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அப்பெண்ணின் அந்த ‘திகில்’ அனுபவம் டிக் டோக்கில் 7 வினாடி வீடியோவாக பதிவேற்றம் கண்டு, இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!