![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-01-Dec-2023-05-43-PM-9423.jpg)
சிங்கப்பூர், டிசம்பர் 1 – சிங்கப்பூரில், இணையம் வாயிலாக, நஞ்சு கலந்த தோள் கிரீமை விற்ற மலேசியர் ஒருவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
“Star Cream” அல்லது “Xing Xing Gao” எனும் அந்த கிரீமை பயன்படுத்தியதால், குழந்தை ஒன்று ஒவ்வாமை பாதிப்புக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம், சுகாதார அறிவியல் துறை அந்த கிரீமிற்கு தடை விதித்தது.
அந்த கிரீமில் நச்சு கலந்திருப்பது அதன் பின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது.
முன்னதாக, அந்த கிரீமை விற்றதாக நம்பப்படும் 30 வயது சின் சொக் யீ எனும் மலேசிய பெண்ணுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2022 ஜனவரி தொடங்கி கடந்தாண்டு ஜூன் வாரம் வரையில் “Shopee” இணைய விற்பனை தளத்தில் அவர் அந்த கிரீமை விற்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஈராண்டுகள் சிறைத் தண்டனை, பத்தாயிரம் டாலர் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.