Latestசிங்கப்பூர்மலேசியா

சிங்கப்பூருக்குள் 980-க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்களைக் கடத்த முயற்சி; மலேசிய ஆடவர் கைது

சிங்கப்பூர், அக்டோபர்-14,சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத 980-க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்களைக் கடத்த முயன்ற 31 வயது மலேசிய ஆடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 26ஆம் தேதி, சிங்கப்பூரின் வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

மலேசியாவில் பதிவுச் செய்யப்பட்ட ஒரு பிக்கப் வாகனத்தைச் சோதனையிட்ட குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள், அதன் டயர்களுக்குள் சிகரெட் பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

டயர்களை வெட்டித் திறந்து சோதனையிட்டபோது, 980-க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, வாகனமோட்டுநர் கைதுச் செய்யப்பட்டதுடன், மேல் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்க இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் வரி செலுத்தப்படாத பொருட்களைக் கடத்தும் குற்றத்திற்கு அபராதம், 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!