Latestமலேசியா

சிலாங்கூர் சுல்தானின்பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை எம். தீனா பெருமிதம்

கோலாலம்பூர், டிச 12 – சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா வின் 78 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய பேட்மிண்டன் வீராங்கனையான எம்.தின்னா நேற்று பி.கே.எஸ் எனப்படும் பிந்தங் கெசெமர்லங்கான் சுகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பேட்மிண்டன் விளையாட்டில் நாட்டின் புகழை உயர்த்துவதற்கு தீனா ஆற்றிய பங்கிற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சிலாங்கூர் சுல்தானின் பிறந்த நாளில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக பேர்லி டான்னுடன் இரட்டையர் பிரிவில் அனைத்துலக ரீதியில் நிலையில் சிறந்த முத்திரை பதித்து வருபவருமான தீனா தெரிவித்தார்.

புத்தாண்டில் பேட்மிண்டன் போட்டிகளில் தொடர்ந்து சிறந்த விளையாட்டை வெளிப்படுத்துவதற்கும் வெற்றிகளை படைப்பதற்கும் இந்த  பி.கே.எஸ் விருது புதியதொரு உற்சாத்தை வழங்கியிருப்பதாக தீனா கூறினார். 2023 ஆம் ஆண்டில் மலேசிய மாஸ்டர்ஸ் மற்றும் ஹங்காங் பேட்மிண்டன் போட்டியின் இறுதியாட்டத்திற்கு பேர்லி டான் – தினா ஜோடி தேர்வு பெற்றனர். பியர்லி காயம் அடைந்ததால் அந்த ஜோடி பல போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்த ஆண்டு முதல் கட்டமாக ஜனவரி 9 ஆம் தேதி முதல் 14ஆம்தேதிவரை வரை ஆக்சியாட்டா அரங்கில் நடைபெறும் மலேசிய பொது பேட்மிண்டன் போட்டியில் பேர்லி டான் – தினா ஜோடி களம் இறங்குகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!