Latestமலேசியா

சீனாவில் சிக்கன் உணவு தயாரிப்பின்போது ஊழியரின் அருவருக்கத்தக்க செயல்; கேமராவில் சிக்கிய காட்சி

சீனா, ஆகஸ்ட் 17 – சீனாவிலுள்ள சிக்கன் உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது தனது கையை கால் சட்டைக்குள் நுழைத்து பின்புற பகுதியை 20 விநாடிகளுக்கும் மேலாகச் சொறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதுகைச் சொறிந்த பின்னர், கைகளைக் கழுவாமல் அவர் உணவைப் பொட்டலமிடும் பணியைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவைப் பிடிக்கப் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் உணவுப் பாத்திரங்களையும் அவர் கையாண்டுள்ளார்.

வாடிக்கையாளர்கள் உணவு தயாரிக்கும் செயல்முறையை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நேரலை ஒளிபரப்பின்போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மேலும் இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி, உணவகத்தின் சுகாதார நடைமுறைகள் குறித்து பலரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!