Latestமலேசியா

சுடும் ஆயுதங்களை விநியோகிப்பதில் குத்தகையாளர் தவறியதால் உள்துறை அமைச்சுக்கு 6 மில்லியன் ரிங்கிட் இழப்பு

கோலாலம்பூர், நவ 22 – சுடும் ஆயுதங்களை விநியோகிப்பதில் குத்தகையாளர் தவறியதால் உள்துறை அமைச்சுக்கு 6 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக 2022 ஆம் ஆண்டிற்கான அரசாங்க தலைமை கணக்காய்வாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுடும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் நிர்வகிப்பது தொடர்பான கொள்கைகள் வரைவதில் பலவீனங்கள் இருப்பதோடு அமைச்சின் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான சுடும் ஆயுதங்கள் காணாமல்போன சம்பவங்களும் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டின் ஆயுதங்கள் சட்ட அமலாக்கதிலும் பலவீனங்கள் உள்ளன. சுடும் ஆயுதங்களுக்கான லைசெஸ் புதுப்பிப்பதிலும் , சுடும் ஆயுதங்கள் கட்டுப்பாட்டிலும் அரச மலேசிய போலீஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதோடு சுடும் ஆயுதங்கள் அகற்றும் நிர்வாகத்தின் குறைபாடுகளும் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருப்பதாகவும் அரசாங்க தலைமை கணக்காய்வாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கை மறுஆய்வு நிறுவனம் அதன் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக உள்துறை அமைச்சினால் எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டது, இதன் விளைவாக RM6.34 மில்லியன் ரிங்கிட் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்றும் தலைமை கணக்காய்வாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!