Latestமலேசியா

சுபாங் ஜெயாவில் ரோலர் கோஸ்டர் விபத்து: பத்து பேர் காயம்

சுபாங் ஜெயா, ஆகஸ்ட்-24- சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் நிகழ்ந்த ரோலர் கோஸ்டர் விபத்தில் பத்து பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சுபாங் ஜெயா காவல் துறைத் தலைவர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, 11 முதல் 44 வயதுக்குட்பட்ட மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் என 22 பேர் அந்த ரோலர் கோஸ்டரில் இருந்தனர். மறுநாள் காலை சுமார் 11.45 மணியளவில் அச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என அவர் சொன்னார்.

அவ்விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே தேவையற்ற ஆரூடங்களை வெளியிட்டு விசாரணைகளுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என Wan Azlan பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு பூங்காவில் பெண் ஒருவர் stretcherரில் வைத்துப் படிக்கட்டுகள் வழியாகக் கீழே கொண்டு வரப்படும் காட்சி அடங்கிய காணொளியொன்று முன்னதாக ‘Threads’ தளத்தில் பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!