
மெக்ஸிக்கோ, ஜூலை-22-மெக்சிகோவில், சுரங்கப்பாதை போல வரையப்பட்டிருந்த சுவரோவியத்தை உண்மையான சாலை என தவறாக நினைத்த பெண் ஒருவர், தனது காரை நேரடியாக சுவரில் மோதிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் பேசும்பொருளாகியுள்ளது.
கார்ட்டூனில் இடம்பெறும் காட்சியைப் போல, மிகவும் தத்ரூபமாக வரையப்பட்டிருந்த அந்த ஓவியம் தொலைவில் பார்க்கும்போது உண்மையான சுரங்கப்பாதை போலவே தோன்றியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, “கார்ட்டூன் காட்சி நிஜமாகிவிட்டது” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



