![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-25-Mar-2024-09-52-AM-6041.jpg)
மும்பை, மார்ச் 25 – திரைப்பட இயக்குநர் அட்லீ, இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான NDTV-யின் கடந்தாண்டுக்கான Indian of The Year விருதை வென்றுள்ளார்.
2023-ஆம் ஆண்டின் சிறந்த இயக்குநர் என்ற பிரிவில் அட்லீ அவ்விருத்துக்குத் தேர்வானார்.
கடந்தாண்டு போலீவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மற்றும் நயன்தாராவை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம், உலகளவில் மாபெரும் வெற்றிப் பெற்றது.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சேர்த்து ஆயிரம் கோடி ரூபாய்கும் மேல் வசூலைக் குவித்த ‘ஜவான்’ பல்வேறு விருதுகளையும் வென்று வருகிறது.
ஜவானின் இமாயல வெற்றி குறித்து கருத்துரைத்த அட்லீ, உண்மையானக் கனவுகள் தான் தூக்கமில்லா இரவுகளைக் கொண்டு வரும்; அதன் அறுவடையே ஜவானின் வெற்றி என பெருமிதத்துடன் சொன்னார்.
19 வயதில் இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அட்லீ, தமிழில் இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
அவரின் முதல் ஹிந்திப் படமும் பிளாக்பாஸ்டர் வெற்றிப் பெற்று, இந்தியாவின் முன்னணி இயக்குநர்களின் ஒருவராக அவரை அடையாளம் காட்டியுள்ளது.