Latestமலேசியா

ஜாலான் செராஸ் மேம்பாலத்தில் விரிசல் எதுவும் இல்லை – பொதுப்பணி அமைச்சு உறுதிச் செய்தது

கோலாலம்பூர், ஜூன்-9 – ஜாலான் செராஸ் அருகே, Setiawangsa-Pantai நெடுஞ்சாலையின் (SPE) மேம்பாலத்தைத் தாங்கிப் பிடிக்கும் crosshead-டில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை.

மலேசிய நெடுஞ்சாலை வாரியம் LLM நேற்று முன்தினம் அங்கு பரிசோதனை நடத்தி அதனை உறுதிச் செய்திருப்பதாக, பொதுப்பணித் துறை அமைச்சு தெரிவித்தது.

LLM, SPE உள்ளிட்ட தரப்புகள் பரிசோதித்ததில் crosshead பகுதியில் வெடிப்பு போல் தெரிவது உண்மையில் கட்டுமான விரிவாக்கத்தின் அடையாளமாகும்.

அதாவது, முன்பு கான்கிரீட் போடப்பட்ட போது ஏற்பட்ட கறுப்பு நிற கோடே என அமைச்சு விளக்கியது.

ஆக அந்த நெடுஞ்சாலைப் பாதிப்படையவில்லை; மாறாக பயனீட்டுக்குப் பாதுகாப்பானதே என அமைச்சு கூறிற்று.

அங்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது குறித்து உடனடி சோதனை நடத்துமாறு LLM மற்றும் SPE உத்தரவிடப்பட்டிருப்பதாக பொதுப் பணி அமைச்சர் Alexander Nanta Linggi முன்னதாகக் கூறியிருந்தார்.

வாகனமோட்டிகளின் பாதுகாப்பு முக்கியம் என அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!