
வெல்லிங்டன், ஜூலை-13-பிரபல ஹாலிவுட் நடிகர் Sam Neill இன்று ஆஸ்திரேலியாவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வழி தெரிவித்துள்ளனர்.
அவருக்கு வயது 78. நியூசிலாந்தைச் சேர்ந்த Sam Neill, இதற்கு முன் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தமக்குப் புற்றுநோய் இல்லை என்று அவர் இவ்வாண்டு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது மரணம் திடீரெனவும் எதிர்பாராத விதமாகவும் நிகழ்ந்துள்ளதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். Neillலின் மரணத்திற்கான காரணம் குறித்து அந்த அறிக்கையில் விரிவாகக் கூறப்படவில்லை.
Sam Neill ‘Jurassic Park’ திரைப்படத்தில் Dr. Alan Grant கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானார். The Piano, Peaky Blinders, Thor, Ragnarok ஆகிய பல புகழ்பெற்ற திரைப்படங்களிலும் தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.
இவ்வேளையில் அவரது மறைவு, திரைத்துறைக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தலைவர்களும் ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.



