Latestமலேசியா

ஜெர்மனியில் இருந்துக் கொண்டு இஸ்லாத்தையும் போலீஸ் படையையும் இழிவுப்படுத்திய மலேசிய ஆடவருக்கு எதிராக விசாரணை அறிக்கை

கோலாலம்பூர், மார்ச்  27 – இஸ்லாத்தைப் பற்றி இழிவாகப் பேசியதற்காகவும் போலீஸ் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை அடுக்கியதற்காகவும், இந்திய ஆடவருக்கு எதிராக விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.

GANESPARANnadaraja என்ற Facebook பக்கத்தின் உரிமையாளரையே போலீஸ் தேடுகிறது.

அவரின் Facebook-கில் பதிவேற்றம் கண்டிருந்த சர்சைக்குரிய சில வீடியோக்கள் பற்றி நெட்டிசன் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை கொடுத்தப் புகாரின் அடிப்படையில் சந்தேக நபர் தேடப்படுவதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.

மத விவகாரங்களைத் தொட்டு பொது அமைதியைக் கெடுத்தது, பிரிவினையைத் தூண்டியது, தீய எண்ணத்துடன் வெறுப்புணர்வை விதைத்தது ஆகிய அம்சங்கள் அடிப்படையில் விசாரணை அமையும் என்றார் அவர்.

தொடக்கக் கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மார்ச் 23-ஆம் தேதி பதிவேற்றப்பட்டது கண்டறியப்பட்டது.

தற்போது ஜெர்மனியின் Hamburg நகரில் வசிப்பதாகக் கூறப்படும் அந்நபர் மீது மொத்தமாக 21 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.

கடைசியாக 2017-ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் போலீஸ் தெரிவிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!