Latestமலேசியா

ஜோகூரில் குடியுரிமை விண்ணப்ப திட்டத்தை மேற்கொள்வதில் தவறு எதுவும் இல்லை – டாக்டர் ராமசாமி விளக்கம்

ஜோகூர் பாரு, ஏப் 10 – ஜோகூரில்  குடியுரிமை விண்ணப்ப திட்டத்தை மேற்கொள்வதில்  எந்தவொரு தவறும் கிடையாது என   பினாங்கு  மாநிலத்தின்  முன்னாள் துணை முதலமைச்சரும்  உரிமை கட்சியின் தலைவருமான பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி தெரிவித்தார்.  தவறான புரிந்துணர்வு காரணமாக  இந்த திட்டம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு   இந்த திட்டத்தை சில தரப்பினர்  அரசியலாக்கியது குறித்து அவர் சாடினார்.  

நாடற்றவர்களுக்கு  குடியுரிமைக்குக்கான முயற்சிகளில் ஈடுபடுவதால்  அரசியல்வாதிகளுக்கு  எந்தவொரு அரசியல் நன்மையும் கிடையாது என   டாக்டர்  ராமசாமி சுட்டிக்காட்டினார். அத்தகையோருக்கு தேவைப்படும் அடையாள ஆவணங்களை பெற்றுத் தருவதற்கு  அரசியல் கட்சிகள் முயற்சியை மேற்கொண்டால்  அவர்களுக்கு தேவையான அடையாள ஆவணங்கள் கிடைப்பதை  விரைவுப்படுத்தும் தொண்டூழிய  சேவையாகவே  அது இருக்கும் என  அவர் கூறினார். 

 தேசிய பதிவுத்துறை  நாடற்றவர்களுக்கான குடியுரிமை பிரச்சனையை தீர்ப்பதற்கு மனிதாபிமான  ரீதியில் நடவடிக்கையை  அதிகமாக மேற்கொண்டால் அத்தகைய மக்களுக்கு உதவுவதற்கு  தொண்டூழிய அமைப்புகள்  உருவாக வேண்டியதில்லையென  இன்று வெளியிட்ட அறிக்கையில் ராமசாமி தெரிவித்தார். 

ஜூன்  30 ஆம்தேதி நடைபெற வேண்டியை அந்த   நிகழ்ச்சி அதன் ஏற்பாடு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியான  போஸ்டரினால்   தவறான புரிந்துணர்வு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டதாக   DAP  யின்   Stulang   சட்டமன்ற உறுப்பினர் Chen Kah Eng   தெரிவித்திருந்தார். 

குடியுரிமைக்கான  ஆவணங்களை  கொண்டிருக்காதது  அல்லது   பெற்றோர்களின அலட்சியம் போன்ற  காரணங்களால்  பிறப்பு பத்திரம் இல்லாதது போன்ற காரணங்களை   நாடாற்ற பிரஜைகள்    பிரச்னைகளை எதிர்நோக்குவதால்  அத்தகையோருக்கு உதவ முன்வந்ததை   Che kah Eng தற்காத்துப் பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!