Latestமலேசியா

ஜோகூரில் கைப்பேசி மோசடியில் 4 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்த இல்லத்தரசி

ஜொகூர் பாரு, ஏப்ரல் 24 – ஜொகூர் பாருவில் கைப்பேசி அழைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட மோசடியில் சிக்கி இல்லத்தரசி ஒருவர் 4 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.

தனக்குக் கொரியரில் ஒரு பொருள் வந்திருப்பதாக மார்ச் 6-ம் தேதி கைப்பேசி அழைப்பை அவர் பெற்றிருக்கிறார்.

மறுமுனையில் இருந்து அடுத்து போலீஸ் எனக் கூறிக் கொண்ட இன்னொரு நபர், அப்பெண் கருப்புப் பண விவகாரத்தில் சிக்கியிருப்பதாகவும், அதனைத் தீர்க்க குறிப்பிட்ட அளவில் பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இதனால் அரண்டுப் போன 46 வயது அம்மாது எதுவும் யோசிக்காமல் 4 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 4 தடவையாக மொத்தம் 4 லட்சம் ரிங்கிட்டை இணையப் பரிமாற்றம் செய்துள்ளார்.

அதன் பின்னரே தாம் மோசடிக்கு ஆளானதை உணர்ந்து ஏப்ரல் 22-ஆம் தேதி அவர் போலீசில் புகார் செய்ததாக, வட ஜொகூர் பாரு OCPD Asst Comm Balveer Singh கூறினார்.

அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 420-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகக் கூறிய Balveer Singh, இது போன்று வரும் அனாமதேய அழைப்புகளை நம்பி பணத்தை பரிமாற்றம் செய்ய வேண்டாம் என பொதுமக்களை மீண்டும் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!