Latestமலேசியா

ஜோகூரில் பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுபாடு; பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்து

ஜோகூர் மாநிலத்தில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் டீசல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, பயனீட்டாளர்கள் பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் இயக்குநர் லிலிஸ் சசிலின்டோ பொர்னோமோ
( Lilis Saslinda Pornomo) வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களைத் தனது துறை தொடர்பு கொண்டதாகவும், தற்போது டீசல் விநியோகிக்கப்பட்டு வருவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விநியோகம் விரைவில் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள விநியோக இடையூறு தற்காலிகமானது மட்டுமே என்பதால் , நிலைமை விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது என இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் Lilis Saslinda சுட்டிக்காட்டினார்.

டீசல் விநியோகம் மீண்டும் நிலைத்தன்மையோடு பயனீட்டாளர்களின் தேவைக்கு போதுமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

அந்த எரிபொருளை ஏற்றிவந்த கப்பல் பாசீர் கூடாங் துறைமுகம் வந்தடைவதில் ஏற்பட்ட தாமதத்தினால் ஜோகூர் மாநிலத்தில் டீசல் எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!