Latestமலேசியா

ஜோகூரில், மார்ச் மாதத்தில் 348 வர்த்தக குற்றங்கள்; RM 8.8மில்லியன் இழப்பு

ஜோகூர் பாரு, ஏப்ரல் 1 – ஜோகூரில், கடந்த மார்ச் முதலாம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரையில், 348 வர்த்தக குற்றச்செயல்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

அந்த எண்ணிக்கை, கடந்தாண்டு அதே காலகட்டத்தில் பதிவுச் செய்யப்பட்ட 306 சம்பவங்களை காட்டிலும், 42 சம்பவங்கள் அல்லது 14 விழுக்காடு அதிகமாகும் என, ஜோகூர் போலீஸ் தலைவர் எம்.குமார் முத்துவேலு தெரிவித்தார்.

அதில் மிக அதிகமாக 292 சம்பவங்கள் அல்லது 84 விழுக்காடு மோசடி குற்றங்களை உடடுத்தியவையாகும்.

61 சம்பவங்கள் இணைய விற்பனை குற்றங்களை உட்படுத்தியுள்ள வேளை ; தொலைப்பேசி மோசடி தொடர்பில் 53 சம்பவங்களும், இல்லாத கடனுதவி திட்டம் தொடர்பில் 45 குற்றங்களும், இல்லாத முதலீட்டு திட்டத்தை உட்படுத்தி 41 சம்பசங்களும், வேலை மோசடி தொடர்பில் 26 குற்றங்களும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

அதனால் ஏற்பட்ட இழப்பும், கடந்தாண்டைக் காட்டிலும், இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 955 ரிங்கிட் அல்லது 3 விழுக்காடு அதிகரித்து 88 லட்சத்து 88 ஆயிரத்து 88 ரிங்கிட் 48 சென்னாக பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக, குமார் சொன்னார்.

அதனால், பொதுமக்கள் கூடுதல் விழிப்போடு இருக்குமாறும் குமார் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!