ஜோகூர் பாரு, மே 2 – ஜோகூர் பாருவில் Kampung Sepakat Baru வில் Sungai Skudai
ஆற்றில் காணாமல்போன ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனின் உடல் நேற்றிரவு மணி 11.15 அளவில் மீட்கப்பட்டது. அந்த சிறுவன் ஆற்றில் வழுக்கி விழுந்த இடத்திலிருந்து 130 மீட்டர் தூரத்தில் நான்கு மீட்டர் ஆழத்தில் அவனது சடலம் மீட்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அச்சிறுவன் ஆற்றில் விழுந்ததாக நேற்று மாலை மணி 5.59அளவில் அவசர அழைப்பை பெற்றதை தொடர்ந்து தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.