
கோலாலம்பூர், நவம்பர் 17 – ஆஸ்கார் நாயகி டான் ஸ்ரீ மிச்செல் யோவ் (Tan Sri Michelle Yeoh), தனது தொழில்துறை சாதனைகளுக்காக, ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மனிதநேய கவுரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
பல்வேறு பின்னணிகளை கொண்ட ஐவருக்கு இன்று அந்த பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட வேளை ; அதில் மிச்செலும் ஒருவர் ஆவார்.
தமக்கு அந்த உயரிய பட்டம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட மிச்செல், தமது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.
தாம் திரையுலகில் கால் தடம் பதிக்கவும், சாதனைகள் புரியவும், உயரிய பட்டங்களை வென்று குவிக்கவும் உறுதுணையாக இருக்கும், இரசிகர்களுக்கு அந்த உயரிய பட்டத்தை சமர்பனம் செய்வதாகவும் மிச்செல் குறிப்பிட்டுள்ளார்.