![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-18-Mar-2024-04-27-PM-2077.jpg)
கோலாலம்பூர், மார்ச் 18 – டிக் டொக் தற்போது “ஆப்லைன் வீடியோ” எனும் புதிய அம்சத்தை இணைத்துள்ளது.
“ஆப்லைன்” அல்லது இணையத் தொடர்பு இல்லாத சமயத்திலும், பயனர்கள் வீடியோக்களை பார்க்க ஏதுவாக அந்த புதிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.
அதன் வாயிலாக, இனி இணையத் தொடர்பு இல்லாவிட்டாலும், டிக் டொக் வீடியோக்களை காணும் வாய்ப்பை அதன் பயனர்கள் பெறுவார்கள்.
அந்த புதிய சலுகையின் கீழ், 120 நிமிடங்களுக்கு உட்பட்ட 50 முதல் 200 வீடியோக்களை பயனர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.
அதே சமயம், ஓர் உள்ளடக்கத்தை பதிவேற்றம் செய்யும் போது, அதற்கு எவ்வளவு இணையத் தரவு பயன்படுத்தப்படுகிறது என்ற விவரத்தையும் டிக் டொக் காட்டும்.
பயணத்தின் போது, குறிப்பாக விமானத்தில் பயணிக்கும் போது, இணையச் சேவை துண்டிக்கப்பட்டாலும், டிக் டொக் பயனர்கள் அதனை தொடர்ந்து இடையூறு இன்றி பயன்படுத்தலாம்.