Latestஉலகம்

டெக்சாசில் கடுமையான புயலினால் நிறுத்தி வைக்கப்பட்ட விமானம் தள்ளப்பட்ட காட்சியின் காணொளி வைரல்

டெக்சாஸ், மே 30 – அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள  Dallas  Fort Worth  விமான நிலையத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  American Airlines விமானம் புயல் காற்றினால் தள்ளப்பட்டது.  90,000 பவுண்டுகள் எடையுள்ள Boeing விமானம், விமானம் ஏறிச் செல்லும்  பாலத்தின் இணைப்பைத் துண்டித்த பிறகு, விமான ஓடும் தளத்திற்கு   தள்ளப்பட்டதாக  New York Post  செய்தி வெளியிட்டது. 

வைரலான அந்த காணொளியில் விமான நிலைய பகுதியை கடுமையான புயல் தாக்கியதால்  விமானம் ஏறும்  பாலத்திலிருந்து விலகிச் செல்வதைக் காண முடிந்தது.  அந்த காணொளியில் , விமானத்தின் அருகே சரக்கு ஏற்றிச் செல்லும் டிரக் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், விமானம்  அந்த truck லாரி மீது  மோதவில்லை.

செவ்வாய்க்கிழமை காலை கடுமையான வானிலையின் போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 737-800 DFW விமான நிலையத்தில் அதன் வாயிலில் இருந்து தள்ளப்பட்டதாக x Handle   breaking   Aviation  Newசில் பதிவிடப்பட்டுள்ளது. மணிக்கு  80 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசிய புயலினால்  அந்த விமானம் தள்ளப்பட்டது.   புயலினால்   Dallas   Fort worth   அனைத்துலக விமான நிலையத்தில் பெரும்பலான விமான சேவைகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டது.    

கடுமையான புயலினால்  விமான நிலைய வளாகத்தில் இருந்த பல வர்த்தக  நிலையங்களும் சேதமடைந்தன. செவ்வாய்க்கிழமை  இரவு வீசிய  புயலில் ஒருவர்  மரணம் அடைந்ததோடு  Texasசில்   ஆறு லட்சத்திற்கும்  மேற்பட்ட மக்கள் மின் விநியோக பாதிப்புக்கு உள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!