Latestஉலகம்

டெல்லி மிருகக்காட்சி சாலையில் வெயிலைச் சமாளிக்க விலங்குகளுக்கு ஐஸ் கிரீம் – பழச்சாறுடன், air cooler வசதியும் ஏற்பாடு

புது டெல்லி, ஜூன்-1 – இந்தியத் தலைநகர் புது டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்க, விலங்குகளுக்கு ஐஸ் கிரீம், பழச்சாறு போன்றவைக் கொடுக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

அதோடு, கூண்டுகளில் காற்றாடி மற்றும் குளிர்சாதனப்பெட்டிகளைப் பொருத்தியும், அடிக்கடி விலங்குகள் மீது தண்ணீர் தெளித்துப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மிருகக்காட்சி சாலையின் இயக்குனர் கூறினார்.

வழக்கமான தீனியோடு, குளுமைத் தரும் குமட்டிப்பழம், முலாம்பழம், வெள்ளரிக்காய் உள்ளிட்டவை தற்போது அதிகளவில் கொடுக்கப்படுகின்றன.

குளுகோஸ் கலக்கப்பட்ட குளிர் நீரும் அடிக்கடி தரப்படுகிறது.

மாமிசம் உண்ணும் விலங்குகளுக்கு, வெப்பத்திற்கு ஏற்றவாறு செரிமானத்துக்கு உதவும் வகையில், குளிர்காலத்தை விட இந்தக் கோடை காலத்தில் 20% குறைவாக உணவு வழங்கப்படுகிறது.

அதற்காக அவற்றுக்கு
உறைந்த இறைச்சி வழங்கப்படுகிறது.

யானைகள் ஒரு நாளைக்கு 3 முறையும், காண்டாமிருகங்கள் 2 தடவையும் குளிர் நீரில் குளிப்பாட்டப்படுகிறன.

முதலைகள் மற்றும் ஆமைகள் போன்ற ஊர்வனவற்றுக்கு கொட்டகைகள் வழங்கப்பட்டுள்ளன.

தெர்மோமீட்டர் மூலம் வெப்பத்தைக் கண்காணிக்க பாம்பு அடைப்புகளுக்குள் ஈரமான கன்னி பைகளும் வைக்கப்பட்டுள்ளன.

வெப்ப அலைக்கு மத்தியில் அங்குள்ள 1,200-க்கும் மேற்பட்ட விலங்குகளின் நடத்தையில் மாற்றம் ஏதும் இருக்கின்றனவா என்பதும் அணுக்கமாக ஆராயப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!