Latestமலேசியா

டேங்கர் லோரியில் கொண்டுச் செல்லப்பட்ட Methanol திரவ ரசாயனம் கசிந்தது

தாப்பா, மார்ச் 7 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் தாப்பாவிலிருந்து வெளியேறும் பகுதியில் டேங்கர் லோரியில் ஏற்றிச் செல்லப்பட்ட திரவமய Methanol ரசாயனம் லோரியின் அடியில் ஏற்பட்ட துவாரத்தின் மூலம் கசிந்தது. நேற்று பிற்பகல் மணி 2.45 அளவில் இதுதொடர்பான அவசர அழைப்பு தங்களுக்கு கிடைத்தாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் நடவடிக்கை பிரிவுக்கான துணை இயக்குனர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். அந்த டேங்கர் லோரியிலிருந்து ரசாயனத்தை வெளியேற்றும் நடவடிக்கைக்காக அந்த டேங்கர் லோரிக்கு பொறுப்பு வகிக்கும் நிறுவனம் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு இதர இரு டேங்கர் லோரிகளை அனுப்பிவைத்தது.

Bidor மற்றும் Pasir Puteh தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அபாயகரமான ரசாயனம் அகற்றும் பிரிவினரின் கண்காணிப்போடு அந்த ரசாயனம் பாதுகாப்புடன் இதர டேங்கர் லோரிகளில் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசாயன கசிவுக்கு உள்ளான சாலையிலிருந்து அந்த டேங்கர் தாப்பா R &R வாகனம் நிறுத்தும் பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் ரசாயன கசிவு ஏற்பட்ட சாலைப் பகுதியில் துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!