Latestஉலகம்

தினமும் 80 கிராம் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய அண்டார்டிகா எரிமலை; அது எரிமலையா? தங்கச் சுரங்கமா? அறிவியலாளர்கள் அதிர்ச்சி

அண்டார்டிகா, ஏப்ரல் 29 – நூற்றுக்கணக்கான சுறுசுறுப்பான எரிமலைகளின் தாயகமாக அண்டார்டிகா திகழ்கிறது.

அதில் ஒன்றுதான் மவுண்ட் எரெபஸ் (Mount Erebus) எரிமலை ஆகும். பூமியிலுள்ள, மிகவும் தீவிரமான மற்றும் தெற்கே செயல்படும் எரிமலைகளில் ஒன்றாகவும் மவுண்ட் எரெபஸ் எரிமலை கருதப்படுகிறது.

பனிக்கட்டி சூழ்ந்த பகுதியில் அமைந்திருக்கும் எரெபஸ் எரிமலை 1972-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதையும் தாண்டி, ஒவ்வொரு நாளும் 80 கிராம் அல்லது ஆறாயிரம் டாலர் மதிப்பிலான தங்கத் தூளை உமிழ்வது, அந்த எரிமலையில் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

அந்த எரிமலையிலிருந்து வெளியாகும் வாயுவில், தங்க உலோகத்தின் சிறிய படிகங்கள் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதோடு, தங்க படிகங்கள் கலந்திருக்கும் அந்த வாயு, எரிமலையில் இருந்து சுமார் 621 மைல்கள் தூரம் வரை காற்றில் பரவி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனினும், அது புதிரான நிகழ்வு அல்ல. மாறாக, அது நமது கிரகத்தின் உள் செயல்பாடுகளை விளக்கும் அரிய அறிவியல் அதிசயம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எரிமலையின் மாக்மா ஒரு அரிய வேதியியலைக் கொண்டுள்ளது. அது அந்த விலைமதிப்பற்ற துகள்களின் தொடர்ச்சியான வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, பூமியின் உட்புறத்திலிருந்து, உருகிய பாறை அல்லது உலோக துகழை எளிதாக மேலே தூசியாக எழ அனுமதிப்பதாக ஆய்வாளர்கள் தெளிவுப்பத்தியுள்ளனர்.

எனினும், எரெபஸ் எரிமலை தொலைதூர உட்புறத்தில் அமைந்திருப்பதால், செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் அதைக் கண்காணிப்பதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!