ஜோகூர் பாரு; செப் 9 – ஜோகூர் பாரு, கம்போங் மாஜூ ஜெயா தேசியப் பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் துர்நாற்றத்தால் வாந்தியால் பாதிக்கப்பட்டனர். இன்று காலை அப்பள்ளியைச் சுற்றி நிலவிய ஒரு வகையான துர்நாற்றத்தால் இச்சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் 10 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த சுகாதாரத் துரை அதிகாரிகள் உடனடியாக தக்க சிகிச்சையை மாணவர்களுக்கு வழங்கினர். பின்னர் மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதோடு மாலை நேர பள்ளியும் ரத்து செய்யப்பட்டது.
நாளை வழக்கம்போல பள்ளி திறக்கப்படுமா என்பது துர்நாற்றத்தின் அளவை பொறுத்தது என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இதனிடையே துர்நாற்றத்திற்கு காரணமானவர்கள் உடனே கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என கிரமாத்து மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நிலைமைய நேரில் கண்டறிய மாநில மந்திரி பெசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து நலம் விசாரித்தார்.