Latestஉலகம்

தென்னாப்பிரிக்காவில், மீன்வளத்தில் “கடற்கன்னியின் வால்” சிக்கியது; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

கேப் டவுன், டிசம்பர் 1 – தென்னாப்பிரிக்கா, கேப் டவுனிலுள்ள, பேரங்காடி ஒன்றில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய மீன் தொட்டியில், “கடற்கன்னி” ஆடையில் நீந்திக் கொண்டிருந்த பெண் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயமான சூழலை எதிர்கொள்ள நேரிட்டது.

அவரது “வால்” அந்த மீன்வளத்தின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டதே அதற்கு காரணமாகும்.

கடந்த சனிக்கிழமை, பார்வையாளர்கள் முன்னிலையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

எனினும், தென்னாப்பிரிக்காவின், நிபுணத்துவ கடற்கன்னி காஸ்ட்யூமராக பணிப்புரியும் அப்பெண், எஞ்சியிருந்த சில வினாடிகளில் விரைந்து செயல்பட்டு, ஆபத்தான சூழலில் இருந்து தன்னை தற்காத்து கொண்டார்.

அப்பெண் சுவாசிக்க ஏதுவாக மேற்பரப்பை நோக்கி நீந்த முயல்கிறார். எனினும், அவர் அணிந்திருக்கும் உடையின் வால், அடிமட்டத்தில் இருக்கும் செயற்கை பாறையில் சிக்கிக் கொண்டதால், சில வினாடிகள் அவர் தத்தளிக்கும் காட்சி அடங்கிய காணொளியை, நபர் ஒருவர் பதிவுச் செய்து வெளியிட்டுள்ளார்.

அதனால், அப்பெண் உடனடியாக தனது கடற்கன்னி ஆடையை கழற்றிவிட்டு, மீன்வளத்தின் மேற்பரப்பை நோக்கி நீந்தி வந்து உயிர் தப்புகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!