
தெமர்லோ, ஆகஸ்ட் 18 – தாய் மற்றும் அவரது 12 வயது மகன் உயிரிழந்த விபத்து தொடர்பாக, 37 வயதான டேங்கர் லாரி ஓட்டுநர் மீது இன்று நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஜாலான் தெமர்லோ–திராங், கிலோமீட்டர் 9 பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், 39 வயது பெண்மணி, மற்றும் அவரது 12 வயதுடைய மகன், பயணித்த காரை டேங்கர் லாரி ஒன்று மோதியது.
விபத்தில் சம்பந்தப்பட்ட கார் மற்றும் லாரி தீப்பிடித்ததைத் தொடர்ந்து காருக்குள் சிக்கிய தாய் மற்றும் மகன் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணம் ஏற்படுத்தியதாக சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 50,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம். மேலும்
நீதிமன்றம் அவருக்கு 10,000 ரிங்கிட் பிணை வழங்கி, வழக்கை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.



