Latestமலேசியா

தைப்பிங்கில், IS தீவிரவாதிகளுக்கு ஆதரவு, வெடிமருந்துகளை வைத்திருந்த தொழிற்சாலை மேலாளருக்கு எதிராக குற்றாச்சாட்டு

தைப்பிங், ஜூன் 11 – ஐஎஸ் (IS) பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவளித்ததாக, தொழிற்சாலை மேலாளர் ஒருவருக்கு எதிராக, தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நீதிபதி முன்னிலையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது, அது புரிவதை குறிக்கும் வகையில், 28 வயது முஹமட் ஆபித் சர்சாகி (Muhammad Aabid Zarkasi), எனும் அவ்வாடவன் தலையசைத்தான்.

ஐஎஸ் பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவளிக்கும் வகையில், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வெடிமருந்துகளை வைத்திருந்ததாக அவன் முதல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.

அதே சமயம், தமது Xiaomi ரக கைப்பேசியில், அந்த பயங்கரவாத கும்பலுடன் தொடர்ப்புடைய ஒன்பது வீடியோக்கள் மற்றும் PDF வடிவில் இதர ஆவணங்களை வைத்திருந்ததாக, அவனுக்கு எதிராக இரண்டாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு பயங்கரவாத செயலை புரிவதற்காக, வெடிமருந்துகளை தயாரித்து தயார் நிலையில் வைத்திருந்ததாக அவன் மூன்றாவது குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளான்.

அக்குற்றங்கள் அனைத்தும், இவ்வாண்டு ஜனவரி 28-ஆம் தேதிக்கும், மே 15-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், பேராக், பாகான் செராய், தாமான் செராய் ஜெயா எனுமிடத்தில் அவன் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதனால்,குற்றவியல் சட்டத்தின் மூன்று வெவ்வேறு பிரிவுகளின் கீழ், அவனுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அதனால், இன்று அவனை ஜாமினில் விடுவிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வழக்கு விசாரணை ஜூலை 11-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!